காசாங்குளம் சுற்றுவட்டார
கிராமத்தில் 40 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி வெளியாக முடியாத சூழல் உள்ளது. வடிகால்களில் தண்ணீர் செல்வதால் வயலில் தேங்கிய நீரால் பயிர்கள் மூழ்கியுள்ளது குறிப்பாக மன்னார்குடி அருகே காசாங்குளம், கருவகுளம், நெம்மேலி, மூன்றாம்சேதி, தட்டான்கோவில், கிராமங்களில் சுமார் 40 ஏக்கர் சம்பா பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு 6000 ரூபாய் வரை செலவாகி உள்ளதால் தற்போது நீரில் மூழ்கிய பயிர்கள் முளைக்குமா அழுகி விடுமா என்ற அச்சம் உள்ளதால் மத்திய மாநில அரசுகள் மழை பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணத்தை வழங்கினால் விவசாயம் சார்ந்த கடன் பிரச்சனைகளிலிருந்து மீள முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.