மன்னார்குடி மந்தக்கார தெருவை சேர்ந்த அசோக்குமார், பரமேஸ்வரி இவர்களுக்கு அருகநாதனி என்ற மகள் உள்ளார். தந்தை அசோக்குமாருக்கு சிறுநீரகம் பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் தாயும் மகளும் மனம் உடைந்தனர். இதனால் மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து இன்று எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர் இந்நிலையில் அருகனாதனியின் தெருவை சேர்ந்தோர் அவரை பார்க்க வீட்டிற்கு வந்த போது அருகநாதனி விஷம் தின்று உயிரிழந்தது தெரியவந்தது. மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு பரமேஸ்வரி மற்றும் அசோக்குமார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.