செருமங்கலம் கிராமத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவு விளை நிலங்களுக்கு வடிகாலாக அப்பகுதியில் செல்லும் கட்டேரி வாய்க்கால் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் கட்டேரி வாய்க்காலில் அதிக அளவு நீர் செல்கிறது. இதனால் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வயல்களில் தேங்கி நிற்கிறது. வாய்க்காளின் நடுவே புதர் மண்டி உள்ளது. வாய்க்காலை தூர்வார வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்