திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வெயில் எரித்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. காலை 10 மணி முதல் கரிய மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கிறது இதனால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் பாதசாரிகள் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.