இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய பொருளாளர் எஸ். ராகவன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் துரை அருள்ராஜன்முன்னிலையிலும் மன்னார்குடியில் நடைபெற்றது.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பு செயலாளர் எஸ். கேசவராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர். வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்,
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதியை நடைமுறையில் உள்ளது. மன்னார்குடியிலிருந்து வடபாதிமங்கலம் -2A, மற்றும் 2B, கொரடாச்சேரிக்கு 12
மற்றும் 19ஆகிய பேருந்துகளும் நகர பேருந்துகளாக இயங்கி வந்தது, இந்த பேருந்துகளில் பெரும்பாலான பெண்கள் விவசாய கூலிதொழில் செய்து வருபவர்களே பயணம் செய்து வருகிறார்கள், இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இந்த பேருந்துகள் புறநகர பேருந்தாக
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அனைத்து பகுதி பெண்களும் கட்டணமில்லா இலவச பயண வசதியை பயன்படுத்தும் வகையில்
கொரடாச்சேரி மற்றும் வடபாதிமங்கலம் வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகளை நகர பேருந்தாக அறிவித்திட தீர்மமானம் நிறைவேற்றப்பட்டது.