மன்னார்குடி சுற்றுவட்டார பகுதி முழுவதும் அதிகாலை முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது இந்த மழையால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது மன்னார்குடி ஐயர் சம்மாது பகுதியில் மழை நீர் வடிந்து செல்லும் வகையில் சாலையின் இருபுறமும் 200 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் கட்டப்பட்டு மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் தேங்காாமல் அருகில் உள்ள குளத்தில் சென்று சேரும். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த மழை நீர் வடிகால் கால்வாய் யில் புதர் செடிகள் மண்டியும் மழை நீரில் அடித்து வரப்படும் மணல் படிந்தும் மழைநீர் கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் தூர்ந்து போய் உள்ளது. மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே மழைநீர் வடிகால் கால்வாயில் மண்டியுள்ள புதிர் செடிகளை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி மழைநீர் அருகில் உள்ள குளத்தில் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.