மன்னார்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற மக்கள்
காவல்துறையை கண்டித்து மன்னார்குடியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேர்ன்குளம் மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தனிநபர் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு ஆதரவாகவும் வழக்கில் தொடர்பில்லாத மருத நில மைந்தர்கள் அமைப்பின் துணை ஒருகினைப்பாளர் நவீன் உள்ளிட்ட 10 பேர் மீது உரிய விசாரணை இன்றி மன்னார்குடி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினர். இதனை கண்டித்து மருதநில மைந்தர்கள் அமைப்பு, தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் மன்னார்குடி கீழ பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர் இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலந்துப்சென்றனர்.