மன்னார்குடியில் நிறைந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

70பார்த்தது
திருவாரூர் மாவட்டம் குருவைமொழி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் ரோடு ரோலர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து கொரடாச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார். சசிகுமார் மன்னார்குடி மாதா கோவில் தெரு அருகே வந்தபோது எதிரி வந்த லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகுமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி