திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது நேற்று முன்தினம் பெய்த மழையால் மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் கிராமத்தில் வயல்வெளிகளிலும் தாழ்வானப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்கத் தொடங்கியது தற்போது அங்கு சம்பா நாற்று பறித்தல் மாற்றும் நடவு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் நடவு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது நடுவு செய்வதற்காக பருத்தி வைக்கப்பட்டிருந்த நாற்று முடிகளும் நீரில் மூழ்கியது தொடர்ந்து மழை பெய்தால் நீரில் மூழ்கி இருக்கும் நெல் நாற்றுகள் அழுகத் தொடங்கிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.