மன்னார்குடியில் கதண்டு கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

74பார்த்தது
மன்னார்குடியில் கதண்டு கடித்து ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பூக்களை தெருவில் இன்று மாலை சிலர் நடந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வானில் பறந்து வந்த கதண்டுகள் சாலையில் சென்றோரை கடித்துள்ளது இதில் முகம் வீங்கி காயமடைந்த நபர்கள் ஏழு பேர் உடனடியாக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த பகுதியில் மரத்தில் கதண்டு கூடு கட்டி இருப்பதால் இதற்கு முன்னரும் இத்தகய சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்த மக்கள் கதண்டுகளை அழிக்க தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி