மழை பாதிப்பு குறித்து மன்னார்குடியில் பிஆர். பாண்டியன் பேட்டி

63பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

சிறு மழை பெய்தால் கூட தமிழ்நாடு முழுவதும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது முன்கூட்டியே சீரமைப்பு பணிகளை திட்டமிடாததால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

ஏரி குளங்கள் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழக நீர்ப்பாசன துறை நிதி இன்றி முடங்கியுள்ளது.
மழை வெள்ள தடுப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :