மன்னார்குடியில் பணி நியமன ஆணைகளை விளங்கிய மாவட்ட ஆட்சியர்

74பார்த்தது
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 122 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று இளைஞர்கள் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்தனர். தேர்வு பெற்றவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டி பேசுகையில் மாணவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நிறுவனங்களில் குறைந்தது ஒரு வருடமாவது பணி புரிந்தால் தான் தொழில் குறித்த அடிப்படை அறிவும் அனுபவமும் கிடைக்கும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள் இளைஞர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி