திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 17 செருமங்கலம் கிராமத்தில் உள்ள வன்னீஸ்வரர் கோவிலில் கடந்த 28 தேதி முதல் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றது.
இதில் மாணவிகள் கோவில் வளாகம் மற்றும் கிராமத்தின் சாலை ஓரங்களில் மண்டி இருந்த புதர் செடிகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்டனர். நேற்று (அக்.,3) மாலை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிராம கமிட்டி அறங்காவலர் விஜயராகவன் கிராம பஞ்சாயத்தார் அறக்கட்டளை தலைவர் எஸ் எம் ராமச்சந்திரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமன் மாவட்ட திட்டத் தொடர்பு அலுவலர் ராஜப்பா திட்ட அலுவலர் உமாராணி இருபால் ஆசிரியர்கள் மற்றும் உள்ளவார் பணி மேற்கொண்ட மாணவிகள் பங்கேற்றனர்.