மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் அருள். இவர் நெற்றி இரவு தஞ்சை சாலையில் நெடுவாக்கோட்டை அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி இவர் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அருள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த மன்னார்குடி நகர போலீசார் உயிரிழந்த அருளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனர் மதியழகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.