திருவள்ளுவர் வணங்கிய ஆலயம் பற்றி தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி கிராமத்தில் கரைகண்டேஸ்வரர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் வழிபடுபவர்களுக்கு விரும்பிய வரம் கிடைப்பதாகவும், திங்களன்று வில்வமாலை சாற்றி வழிபடுபவர்களுக்கு பணப் பிரச்சனை தீர்வதாகவும் நம்பப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ-ல் தொலைவில் உள்ள வெள்ளிமலை அருகே இந்த கோயில் அமைந்துள்ளது.