சாலையில் கிடந்த மனித தலை.. விசாரணையில் நடந்த ட்விஸ்ட்

72பார்த்தது
சாலையில் கிடந்த மனித தலை.. விசாரணையில் நடந்த ட்விஸ்ட்
மதுரையில் திருப்பாலை காவல் நிலையம் அருகே நத்தம் சாலையின் நடுவில் மனித தலை மட்டும் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி புதன்கிழமை (நவ 13) அன்று உடல்நலக்குறைவால் இறந்ததையடுத்து மயானத்தில் எரியூட்டப்பட்ட அவரது உடல் மழை வந்ததால் பாதி மட்டும் எரிந்ததாக கூறப்படுகிறது. கவனக்குறைவால் மயான ஊழியர்கள் அதனை பார்க்காமல் இருந்த நிலையில், நாய் தலையை இழுத்து வந்து சாலையில் போட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி