நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் மாவோரி பழங்குடியின மக்கள் ஆவர். இந்நிலையில் மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இதனை எதிர்க்கும் வகையில் மாவோரி சமூகத்தைத் சேர்ந்த பெண் எம்.பி., ஹனா ரவ்ஹிதி மசோதாவின் நகலை கிழித்தார். பின்னர் அவர் மற்றும் மாவோரி இனத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் தங்களின் பாரம்பரிய ஹக்கா நடனத்தை அரங்கேற்றி முழக்கமிட்டனர். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.