விஜயை அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம்: இபிஎஸ் அறிவுறுத்தல்
தவெக கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அதே நேரம் எதிர்க்கட்சியான அதிமுகவை விமர்சிக்காததோடு எம்ஜிஆரையும் பாராட்டி பேசினார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பதால் அவரை அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.