சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய வரவாக ஆறாத புண்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், உயர் அழுத்த பிராண வாயு கருவியை (Hyperbaric Oxygen Therapy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 60 முதல் 65 சதவீத தீக்காய புண்கள் கூட குணமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மெஷினுக்குள் காத்திருக்கும் நேரம் களைப்பு தெரியாமல் இருக்க சீரியல், படங்கள் போடப்படுகின்றன.