ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

60பார்த்தது
ரயில் மோதி 4 தமிழர்கள் பலி
கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் ரயில்வேயில் பணியாற்றிய 4 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை ஆகற்றிக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் மீது ரயில் மோதியது. இக்கோர விபத்தில் லட்சுமணன், ராணி, வள்ளி, லட்சுமணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்தவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி