மத்தியப் பிரதேச மாநிலம் , திண்டோரி மாவட்டத்தில் நிலப்பிரச்சனை காரணமாக 3 பேர் அடித்து கொல்லப்பட்டனர். முன்னதாக இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராஜ் (40) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சிவராஜை வைத்திருந்த படுக்கையில் இருந்த ரத்த கரையை அவரின் 5 மாத கர்ப்பிணி மனைவியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் மருத்துவமனை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.