கேரளாவில் மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாசார நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்" எனக்கூறினார். மேலும், பாஜகவின் ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டங்களை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.