பவானிசாகர் அணையின் நீர்வரத்து 9,000 கன அடி அதிகரிப்பு

83பார்த்தது
பவானிசாகர் அணையின் நீர்வரத்து 9,000 கன அடி அதிகரிப்பு
ஈரோடு பவானி சாகர் அணையின் நீர்வரத்து ஒரே நாளில் சுமார் 9,000 கன அடி அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக 4,971 கன அடியாக இருந்த நீர்வரத்து 13,982 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தற்போது 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 105 அடி கொண்ட பவானி சாகர் அணையில் தற்போது 92.17 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சுற்றியுள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி