கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டனில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார். ரிஷி சுனக் தோல்விக்கு பிறகு இந்த தலைமை மாற்றம் நடந்துள்ளது.