ஒற்றை தலைவலி 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த பாதிப்பு ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம் வருகிறது. குறிப்பாக 35 முதல் 45 வயது உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உணவு பழக்கத்தை மாற்றி கொள்ளுதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல், தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மையை சரி செய்வது போன்ற விஷயங்களை சரியாக பின்பற்றினால் ஒற்றை தலைவலி பாதிப்பு சரியாகும்.