தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (நவ., 03) ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த வாரம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்த நிலையில், இன்று கட்சியின் உட்கட்டமைப்பு விவகாரங்கள் பற்றி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மாநாட்டில் சீமானை மறைமுகமாக விஜய் சாடிய நிலையில், அண்மையில் நடந்த நாதக பொதுக்கூட்டத்தில் விஜய்யை சீமான் விமர்சித்தார். இது குறித்தும் விஜய் ஆலோசிக்க உள்ளார்.