
நெல்லை: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்கள் கைது
திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் இருவேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்ட மகாராஜன், பிரேம்குமார் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் மகாராஜன் 19 ஆண்டுகளாகவும், பிரேம்குமார் 20 ஆண்டுகளாகவும் தலைமறைவாக இருந்தவர்களை சென்னை மற்றும் கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.