நெல்லையில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருப்பசாமி பாண்டியன் நேற்று உயிரிழந்தார். அவரின் பூத உடலுக்கு இன்று (மார்ச் 27) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் கட்சியை உயிராக நேசித்தவர் கருப்பசாமி பாண்டியன் என புகழாரம் சூட்டினார்.