திருநெல்வேலி மாவட்டம் சந்தைப்பேட்டையில் வைத்து இன்று (மார்ச் 31) எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் பைஜியை விடுதலை செய்யக்கோரி கண்டனம் முழக்கம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ பாளையங்கோட்டை ஒன்றிய துணை தலைவர் ஆஷாத், பாளையங்கோட்டை பகுதி துணைத்தலைவர் அரசடி மீரான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.