நெல்லை மாநகர கொண்டாநகரம் சம்ஸ் நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டிற்குள் இன்று (ஏப்ரல் 5) 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கதுரை தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.