
நெல்லை: தடை அறிவித்த வனத்துறை
நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளதால் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி முதல் சோதனை சாவடி திறக்கப்படும் என வனத்துறை இன்று (பிப்.20) அறிவித்துள்ளது.