
நெல்லை: சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
நெல்லையில் இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோன்பானது இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சேரன்மகாதேவி மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் இன்று சிறப்பு ரமலான் மாத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.