நெல்லையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 29) தாமிரபரணி ஆறுகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆற்று பாலத்தில் சீவலப்பேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.