திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சேனைத்தலைவர் மண்டபம் அருகிலுள்ள அண்ணா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பின்பகுதியில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து மூன்று வருடங்கள் மேல் ஆகின்றது. இதில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பள்ளியின் முன் பகுதியில் உள்ள கைப்பிடி சுவர் இடிந்து விழுவது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.