
பணகுடியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் அதிமுக பூத் எண் 51 52 க்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகப் பொருளாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அவர் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பணகுடி பேரூர் கழக செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.