துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு கெட் அவுட் செல்வோம் என உதயநிதி தெரிவித்தார். பதிலுக்கு பதில் இன்று (பிப்ரவரி 21) அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்ற வார்த்தையை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் கெட் அவுட் ஸ்டாலின் என்ற பதாகை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.