சிவந்திபுரம் அருகே பாபநாசம் திருக்கோயில் அமைந்துள்ளது. எதிரே தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இறந்தவர்களுக்கு ஆன்மீக ஜடங்குகள் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருவார்கள். அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் பாபநாசத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவு காணப்பட்டது. மக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி அருகில் உள்ள பாபநாசம் கோவிலில் வழிபட்டு சென்றனர்.