நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று (ஜனவரி 24) நெல்லை மாவட்டம் பணகுடி ரயில் நிலையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தில் பயணிகள் சீட்டு வழங்கும் மையம் பிளாட்பார்ம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பயணிகள் சார்பில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.