தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லை வருகிறார். அவர் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல்வர் வர இருப்பதால் தற்போது இன்று வெள்ளநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி மேடை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.