தேனி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று(அக். 22) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குறைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.