பெரியகுளம் பகுதியில் காலை முதல் விட்டு விட்டு மிதமான சாரல் மழை பெய்த வந்தது. இந்நிலையில், இரவு 7 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரியகுளம், தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, முருகமலை, A. புதுப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி தேவதானப்பட்டி & சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.