தேனி மாவட்ட டாஸ்மாக் குடோனில் மது பாட்டில்களை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணியாளர்கள் இன்று (அக். 14) காலை தேனி டாஸ்மாக் குடோன் முன்பு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் காளிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.