தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை தினத்தினை முன்னிட்டு இன்று (அக்.,5) ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் தேனி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர்.