தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்த நிலையில், அப்பணிக்காக தேனி மாவட்டத்தில் பல்வேறு நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று (அக். 21) தேனி விரல்ரேகை பிரிவின் டி. எஸ். பி. , அலுவலகத்தில் கிரேடு 2 போலீஸ்காரர்கள் 58, சிறை வார்டன் 2, தீயணைப்பு வீரர்கள் 15 என 93 பேர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.