

தேனி பக்தர்கள் பரவசத்துடன் வீரப்ப அய்யனார் சுவாமி வீதி உலா
தேனி பக்தர்கள் பரவசத்துடன் வீரப்ப அய்யனார் சுவாமி வீதி உலா தேனி வீரப்ப அய்யனார் சித்திரை திருவிழா நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று வீரப்ப அய்யனார் கோவிலில் இருந்து மின் அலங்காரத்துடன் புறப்பட்டு தேனி பகுதியில் அமைந்துள்ள சோலைமலை அய்யனார் கோவிலுக்கு வீதி உலா சென்றார். இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை ஏராளமான பொதுமக்கள் செலுத்தினர்