தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள ஏத்தகோவிலை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த நிலையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மாரியம்மாள்(55) என்பவர் தனது சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.