வீட்டில் இறந்து கிடந்த கறிக்கடை தொழிலாளி
அன்னஞ்சியை சேர்ந்த சித்திக் (48) என்பவர் அல்லிநகரத்தில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து கொண்டு தற்காலிகமாக அல்லிநகரம் காந்தி நகர் 4வது தெருவில் வீடு எடுத்து தனியாக தங்கி வந்தார். அவர் குடியிருக்கும் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அல்லிநகரம் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் கிடந்த சித்திக் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.