தேனியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் என இதுவரை 20 பேர் தேனி சி. பி. சி. ஐ. டி போலீசாரால் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய வடபுதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை சி. பி. சி. ஐ. டி போலீசார் நேற்று (செப். 20) கைது செய்தனர்.