தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் சின்னமனூர் நகராட்சியில் இன்று அதிகாலையில் மிதி வண்டியில் வந்து பொதுமக்களுடன் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் உழவர் சந்ததியில் தற்போது அகற்றப்பட்டுள்ள அரசமரம், ஆலமரங்களை பார்வையிட்டார். மேலும், அரசு மருத்துவமனை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் குறைகளையும் கேட்டறிந்தார். திடீர் விசிட்டால் நகர மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.