தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க காணப்பட்டது. இந்நிலையில் மாலை பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி, ஜல்லிப்பட்டி, வரட்டாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது